

‘தாக்கத்’ திரைப்படம் தோல்வி அடைந்ததற்கு காரணம் தனக்கு எதிராக தூண்டப்பட்ட பிரச்சாரம் தான் காரணம் என தெரிவித்துள்ளார் நடிகை கங்கனா ரனாவத்.
கங்கனா நடித்து சமீபத்தில் வெளியான இந்தி திரைப்படம், ‘தாக்கத்’. ரூ.85 கோடியில் உருவாக்கப்பட்ட இப்படம் ரூ.4 கோடி மட்டுமே வசூலித்தது. இந்த திரைப்படம் கடும் நஷ்டத்தை சந்தித்ததால் தயாரிப்பாளர் தீபக் முகுத், தன் சொத்துகளை விற்றார் என்று கூறப்பட்டது. ஆனால், தீபக் முகுத் அதை மறுத்தார்.
இந்நிலையில், தனக்கு எதிராக தூண்டப்பட்ட பிரச்சாரம் காரணமாகவே இந்த படம் தோல்வியை சந்தித்ததாக கங்கனா தெரிவித்துள்ளார். “தினமும் காலையில் எழுந்து பார்த்தால், ‘தாக்கத்’ திரைப்படம் தோல்வி அடைந்ததாக நூறு கட்டுரைகள் வருகின்றன. ஆனால், ‘ராதே ஷ்யாம்’, ‘கங்குபாய் காத்யாவாடி’, ‘ஜுக் ஜுக் ஜியோ’ போன்ற படங்கள் ஃபிளாப் ஆனது பற்றி ஏன் யாருமே வாய் திறக்கவில்லை’’ என்று கோபமாக கேட்டுள்ளார் கங்கனா ரனாவத்.