ஆயுஷ்மானுக்கு ஜோடியாகும் சமந்தா

ஆயுஷ்மானுக்கு ஜோடியாகும் சமந்தா
Updated on
1 min read

நடிகை சமந்தா, ‘ஃபேமிலிமேன் 2’ வெப் தொடர் மூலம் இந்தியிலும் பிரபலமானார். ‘புஷ்பா’ படத்தில் அவர் ஆடிய பாடலும், இந்தி ரசிகர்கள் இடையே அவருக்கு புகழை பெற்றுத் தந்துள்ளது. இதையடுத்து, அவர் இந்தி படங்களில் நடிக்க உள்ளார். பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தயாரிப்பில் அக்‌ஷய்குமார் ஜோடியாக அவர் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், இதன்மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானாவுடன் ஹாரர் காமெடி படத்தில் சமந்தா நடிக்க உள்ளார். தினேஷ் விஜன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது. தற்போது ‘சாகுந்தலம்’, ‘யசோதா’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள சமந்தா, ‘குஷி’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து வருகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in