திடீர் உடல்நல பாதிப்புக்குப் பின் படப்பிடிப்புக்குத் திரும்பிய தீபிகா படுகோனே

திடீர் உடல்நல பாதிப்புக்குப் பின் படப்பிடிப்புக்குத் திரும்பிய தீபிகா படுகோனே
Updated on
1 min read

பிரபல நடிகை தீபிகா படுகோனேவுக்கு இதய துடிப்பு திடீரென அதிகரித்ததால் அவர் உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார்.

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ‘Project K’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு செவ்வாய்க்கிழமை ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது நடிகை தீபிகா படுகோனாவுக்கு இதய துடிப்பு அதிகரித்தது.

இதனைத் தொடர்ந்து அவர் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீபிகாவுக்கு மருத்துவர்களால் பரிசோதனை நடத்தப்பட்டது. தீபிகாவுக்கு வாயு தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் மீண்டும் ‘Project K’ படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பினார்.

தொடர்ந்து ‘Project K’ படம் தொடர்பான காட்சிகளில் தீபிகா நடித்து வருகிறார். Project K படத்தில் தீபிகாவுடன் பிரபாஸும், அமிதாப் பச்சனும் நடித்து வருகின்றனர்.

தீபிகா மருத்துவமனை சென்ற தகவல் தீயாகப் பரவியதும் சமூக வலைதளங்களில் பதறிய பிரபலங்களும், அவரது ரசிகர்களும் பின்னர், உடல் நிலை சீராகி படப்பிடிப்புத் தளத்துக்கு தீபிகா திரும்பியதை அறிந்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in