சுல்தான் ட்ரெய்லர்: இரண்டே நாளில் 50 லட்சம் பார்வை

சுல்தான் ட்ரெய்லர்: இரண்டே நாளில் 50 லட்சம் பார்வை

Published on

சல்மான் கான் நடிப்பில் வெளிவரவுள்ள 'சுல்தான்' இந்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் பதிவேற்றப்பட்ட இரண்டே நாட்களில் 50 லட்சம் பார்வையைக் கடந்துள்ளது.

மல்யுத்த வீரர் ஒருவரின் வாழ்க்கையை சொல்லும் ’சுல்தான்’ படத்தில் சல்மான் கான் - அனுஷ்கா சர்மா இணைந்து நடித்துள்ளனர். இதில் மல்யுத்த வீரராக நடித்துள்ள சல்மான், அதற்காக சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டு உடலையும் அதற்கேற்றார் போல மாற்றினார்.

அனுஷ்கா சர்மாவும் மல்யுத்த வீராங்கனையாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை 'கூண்டே', 'மேரே பிரதர் கி துல்ஹான்' திரைப்படங்களை இயக்கிய அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ளார். விஷால் சேகர் இசையமைத்துள்ள இந்தப் படம் ஜூலை 6-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

’சுல்தான்’ படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பதிவேற்றப்பட்ட 16 மணி நேரத்தில் 15 லட்சம் பார்வையை கடந்தது குறிப்பிடத்தக்கது.

படத்தின் ட்ரெய்லர்:

</p>

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in