

நடிகை தாப்ஸி 'தக் தக்’ என்ற படத்தையும் வயாகாம்18 ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கில் நடித்து வந்த தாப்ஸி, இந்திக்கு சென்றதும் முன்னணி நடிகையானார். நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளில் நடித்து வரும் தாப்ஸி, தற்போது கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை கதையான ‘சபாஷ் மித்து’ படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இந்நிறுவனம்மூலம் சமந்தா நடிக்கும் படத்தை தயாரிக்கும் அவர், அடுத்து ‘தக் தக்’ என்ற படத்தையும் வயாகாம்18 ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரிக்கிறார். இது 4 பெண்களை மையமாகக் கொண்ட கதை. தருண் துடேஜா இயக்கும் இதில் பாத்திமா சனா ஷேக், ரத்னா பதக் ஷா, தியா மிர்ஸா, சஞ்சனா சங்கி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் நான்கு பெண்களும் பைக் மீது அமர்ந்து இருப்பதுபோல் போஸ் கொடுத்துள்ளனர்.
’தக் தக்’ படத்தில் பெண்களே மைய கதாபாத்திரங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. தாப்ஸி தயாரிப்பில் வெளியான முந்தையப் படங்கள் போல் இந்தப் படத்திலும் பெண் கதாபாத்திரங்களுக்கே முக்கியதுவம் அளிக்கப்பட்டுள்ளது.
’தக் தக்’ திரைப்படம் பெண்களின் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.