

தனது இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் 'வீரப்பன்' படத்துக்காகக் காத்திருக்கும் ராம் கோபால் வர்மா, இப்படம் குற்றவாளிகளின் புகழ்பாடும் படமல்ல என்று கூறியிருக்கிறார்.
படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட ராம் கோபால் வர்மா, 'வீரப்பன்' திரைப்படம் குற்றவாளிகளின் புகழ்பாடும் படமல்ல. ஆனால் இந்தப்படம் வீரப்பனுக்கு இந்த நிலை எப்படி ஏற்பட்டது என்பதைக் காட்டும் கண்ணாடியாக இருக்கும்.
வீரப்பனுடைய கதை எப்படி கணிக்க முடியாத ஒரு மனிதன், ஒட்டுமொத்த அமைப்பையும் புரட்டிப் போகிறான் என்பதற்கான ஆதாரம். அது டொனால்ட் ட்ரம்ப் விஷயத்திலும் இப்போது உண்மையாகி இருக்கிறது.
எல்லோருக்கும் வீரப்பன் உள்ளிட்ட மோசமான மனிதர்களைப் பற்றிய அறிவு கட்டாயம் இருக்கவேண்டும். அதுதான் சமுதாயத்தை முன்னெடுத்துச் செல்லும் என்று கூறியிருக்கிறார்.
அத்தோடு, "பிரபல சந்தனக் கடத்தல் மனிதன் முனியசாமி வீரப்பனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் 'வீரப்பன்'. இது, எப்படி ஒரு மனிதனைக் கொல்வதற்காக மட்டும் மனித வேட்டை அரங்கேற்றப்பட்டது என்பதைச் சொல்கிறது" என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.