

சல்மானுடன் முதல்முறையாக சுல்தான் படத்தில் நடிக்கும் அனுஷ்கா சர்மா, சல்மான்கான் மீது ஏன் ஒருவர் கண்மூடித்தனமான ஈடுபாடு கொண்டிருக்கிறார் என்பதை அவருடன் நடிக்கும்போதுதான் உணர முடியும் என்று கூறியிருக்கிறார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை), சல்மான்கான், அனுஷ்கா சர்மா இருவரும் இணைந்து சுல்தான் பட ட்ரெய்லரை வெளியிட்டனர். அப்போது சல்மானுடன் இணைந்து நடிப்பது பற்றிப் பேசிய அனுஷ்கா,
"சல்மான்கான் புத்துணர்வு மிக்கவர். அவருடன் வேலை பார்க்கும்போது, நீங்கள் நிம்மதியாக உணர்வீர்கள். சல்மான்கான் மீது ஏன் ஒருவர் கண்மூடித்தனமான ஈடுபாடு கொண்டிருக்கிறார் என்பதை அவருடன் நடிக்கும்போதுதான் உணர முடியும். இந்தப் படத்துக்காக அவர் கடினமாக உழைத்திருக்கிறார்" என்று கூறியிருக்கிறார்.
ஜூலை 8-ம் தேதியன்று வெளியாகவுள்ள சுல்தான் படத்தை அலி அப்பாஸ் ஸஃபார் இயக்க, ஆதித்யா ராய் சோப்ரா தயாரித்திருக்கிறார். இப்படத்தில் சல்மான்கான் மல்யுத்த வீரராக நடித்திருக்கிறார்.