'எதிர்வினை என்னை பாதித்தது' - பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததற்காக மன்னிப்புக் கேட்ட அக்சய்

'எதிர்வினை என்னை பாதித்தது' - பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததற்காக மன்னிப்புக் கேட்ட அக்சய்
Updated on
1 min read

'புகையிலை பொருட்களின் விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்' என பாலிவுட் நடிகர் அக்சய் குமார் தெரிவித்துள்ளார்.

அக்சய் குமார் தனியார் நிறுவனம் ஒன்றின் பான் மசாலா விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த விளம்பரத்துக்காக கடந்த சில நாட்களாக அவர் நெட்டிசன்களிடம் இருந்தும் அவரின் ரசிகர்களிடம் இருந்தும் கடுமையான ட்ரோல்களை எதிர்கொண்டு வந்தார். இப்போது ரசிகர்களின் எதிர்ப்புக்கு பணிந்து புகையிலை விளம்பரத்தில் நடித்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

அக்சய் குமார் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரசிகர்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஒவ்வொருவரின் எதிர்வினையும் கடந்த சில நாட்களாகவே என்னை வெகுவாக பாதித்துள்ளது. இனி நான் புகையிலைகளை பரிந்துரைக்க மாட்டேன்.

உங்கள் உணர்வுக்கு மதிப்பளித்து புகையிலை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடனான எனது தொடர்பை முறித்துக்கொள்கிறேன். முழு பணிவுடன் அந்த விளம்பரத்தில் இருந்து பின்வாங்குகிறேன். இந்த விளம்பரத்தில் நடித்த பணத்தை வேறு ஏதேனும் நல்ல காரணத்திற்காக பயன்படுத்தவும் முடிவெடுத்துள்ளேன். எதிர்காலத்தில் எனது விளம்பரத் தேர்வுகளில் மிகுந்த கவனத்துடன் இருப்பேன் என்றும் அதற்கு பதிலாக மக்களின் அன்பை கேட்பேன்" என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in