Published : 16 Apr 2022 07:35 PM
Last Updated : 16 Apr 2022 07:35 PM

வட இந்தியாவில் ‘ஆர்ஆர்ஆர்’ ஆதிக்கத்தை உடைத்த ‘கேஜிஎஃப் 2’

வட இந்தியாவில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாவது நாள் வசூல் சாதனையை 'கேஜிஎஃப் 2' திரைப்படம் முறியடித்துள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடிப்பில் கடந்த 14-ம் தேதி வெளியான திரைப்படம் 'கேஜிஎஃப் 2'. ஸ்ரீனிதி ஷெட்டி, சஞ்சய் தத், ஈஸ்வரி ராவ், ரவீனா டன்டன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

'கேஜிஎஃப் 2' படத்தின் இந்திப் பதிப்பு இரண்டாவது நாளில் (ஏப்ரல் 15) 44 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இந்திப் பதிப்பு இரண்டாவது நாளில் ரூ.3 கோடி ரூபாயை வசூலித்தது. இதன் மூலம் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாவது நாள் வசூலை 'கேஜிஎஃப் ' முறியடித்துள்ளது. அதேநேரம், விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடித்த பீஸ்ட் இந்தியில் இரண்டாவது நாள் ரூ.15.லட்சம் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

வட இந்தியாவில் 'கேஜிஎஃப் 2' படம் வெளியான முதல் நாள் ரூ.53.95 கோடியும், இரண்டாவது நாள் ரூ.46 கோடியும் வசூலித்துள்ளது. படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.100 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x