ரன்பீர் கபூர் - ஆலியா பட் நடிக்கும் 'பிரம்மாஸ்திரம்' போஸ்டர் வெளியீடு

ரன்பீர் கபூர் - ஆலியா பட் நடிக்கும் 'பிரம்மாஸ்திரம்' போஸ்டர் வெளியீடு
Updated on
1 min read

ரன்பீர் கபூர் - ஆலிய பட் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் 'பிரம்மாஸ்திரம்' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பிரம்மாஸ்திரம்' . இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆலியா பட் நடிக்கிறார். இவர்களுடன் நாகார்ஜுனா அக்கினேனி, மௌனி ராய், அமிதாப் பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படம் மூன்று பாகங்களாக தயாராகவுள்ளது. தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் 2022 ஆம் செப்டம்பர் 9ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குநர் அயன் முகர்ஜி படத்தின் புதிய போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் படத்தின் காதல் பாடலான 'கேசரியா...' பாடலின் க்ளிம்ப்ஸ் காட்சிகளையும் வெளியிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in