DPIFF விருதுகள்: சிறந்த படங்களாக ‘புஷ்பா’, ‘ஷெர்ஷா’ தேர்வு

DPIFF விருதுகள்: சிறந்த படங்களாக ‘புஷ்பா’, ‘ஷெர்ஷா’ தேர்வு
Updated on
1 min read

தாதாசாஹேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. 2022ஆம் ஆண்டுக்கான விருது நிகழ்ச்சி நேற்று (பிப்.20) மும்பையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பாலிவுட் மற்றும் தொலைகாட்சி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ‘83’, ‘ஷெர்ஷா’, ‘புஷ்பா’ உள்ளிட்ட படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

முழுமையான விருதுப் பட்டியல்:

சிறந்த திரைப்படப் பங்களிப்பு: ஆஷா பரேக்

சிறந்த நடிகர்: ரன்வீர் சிங் (83)

சிறந்த நடிகை: கிரித்தி சனோன் (மிமி)

சிறந்த நடிகர் (விமர்சகர்கள் பரிந்துரை) : சித்தார்த் மல்ஹோத்ரா (ஷெர்ஷா)

சிறந்த நடிகை (விமர்சகர்கள் பரிந்துரை) : கியாரா அத்வானி (ஷெர்ஷா)

சிறந்த துணை நடிகர்: சதீஷ் கவுஷிக் (காகஸ்)

சிறந்த துணை நடிகை: லாரா தத்தா (பெல் பாட்டம்)

சிறந்த வில்லன் நடிகர்: ஆயுஷ் சர்மா (அந்திம்: தி ஃபைனல் ட்ரூத்)

கடந்த ஆண்டுக்கான சிறந்த திரைப்படம்: புஷ்பா

சிறந்த படம்: ஷெர்ஷா

சிறந்த நடிகர் (வெப் சீரிஸ்): மனோஜ் பாஜ்பாய் (தி ஃபேமிலி மேன் 2)

சிறந்த நடிகை (வெப் சீரிஸ்): ரவீனா டாண்டன் (ஆரண்யக்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in