கனடா பிரதமரை தாக்கும் கர்மா: கங்கனா கருத்து

கனடா பிரதமரை தாக்கும் கர்மா: கங்கனா கருத்து

Published on

மும்பை: கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து கனடாவின் ஒட்டாவா நகரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பாதுகாப்பு கருதி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் ரகசிய இடத்தில்தஞ்சமடைந்துள்ளதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது.

இது தொடர்பான செய்தியை, இந்தி நடிகை கங்கனா ரனாவத்நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன், “கனடா பிரதமர் ட்ரூடோ இந்திய போராட்டக்காரர்களை ஊக்குவித்தார். இப்போது அவருக்கு எதிராக சொந்த நாட்டில் மக்கள் போராடுவதால் ட்ரூடோ ரகசிய இடத்தில் தஞ்சமடைந்துள்ளார். கர்மா அவரை திருப்பித் தாக்குகிறது” என பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in