

பழம்பெரும் பின்னணிப் பாடகர் லதா மங்கேஷ்கருக்கு (92) லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று ஏற்பட்டதால், தெற்கு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த வாரம் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் அம்மருத்துவமனையின் இணை பேராசிரியர் டாக்டர் பிரதீத் சம்தானி நேற்று கூறும்போது, “லதா மங்கேஷ்கர் தொடர்ந்து சிறிது காலம் மருத்துவமனையில் இருப்பார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருகிறார்” என்றார்.