

‘கிக்’ படத்தில் ஜாக்குலின் ஃபெர்னான்டஸுடன் சேர்ந்து நடித்துள்ளார் சல்மான் கான். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சல்மான்கான், “எனக்கு பாலிவுட்டில் மிகவும் பிடித்த நடிகை ஜீனத் அமன்தான். ஜீனத் அமன் இடத்தை ஜாக்குலின் பிடிப்பார் என்ற நம்பிக்கை அவரது நடிப்பைப் பார்த்த பிறகு வலுவடைந்திருக்கிறது” என்று கூறியுள்ளார். சல்மான்கானின் இந்த பாராட்டால் உற்சாகமாகி இருக்கிறாராம் ஜாக்குலின்.