

2015-ம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதுக்கு 78 வயது மூத்த இந்தி நடிகர் மனோஜ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய சினிமாவுக்கு இவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புக்காக 47-வது தாதா சாகேப் பால்கே விருதை இவருக்கு அளிக்கப்படுகிறது.
இவர் நடித்த ஹரியாலி அவுர் ராஸ்தா, வோ கவுன் தி, இமாலயா கி காட் மெய்ன், தோ பதான், உப்கார், பத்தர் கி சனம், புரப் அவுர் பஸ்சிம், க்ரந்தி மற்றும் ரோட்டி கப்டா அவுர் மகான் ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தகுந்தவை.
பத்ம ஸ்ரீ விருதை ஏற்கெனவே பெற்றுள்ள மனோஜ் குமார், 7 பிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.