கங்கணாவுக்கு விரைவில் திருமணம்?

கங்கணாவுக்கு விரைவில் திருமணம்?
Updated on
1 min read

திருமணம் எப்போது என்ற கேள்விக்கு நடிகை கங்கணா பதிலளித்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கணா ரணாவத். சமீபத்தில் வெளியான ‘தலைவி’ திரைப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது 'தாக்கட்', 'மணிகார்னிகா ரிட்டர்ன்ஸ்', 'தேஜஸ்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கங்கணா. இந்தியாவின் அவசர நிலை காலகட்டத்தைப் பற்றிச் சொல்லும் 'எமர்ஜென்சி' திரைப்படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு பக்கம் அவரது தயாரிப்பு நிறுவனம், நவாசுதின் சித்திக் நடிக்கும் 'டிகு வெட்ஸ் ஷெரு' என்கிற வெப் சீரிஸைத் தயாரிக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஆங்கில ஊடகத்துக்குப் பேட்டியளித்த கங்கணா, திருமணம் எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

''நிச்சயமாகத் திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு மனைவியாகவும், தாயாகவும் இருப்பேன். அதுமட்டுமின்றி புதிய இந்தியாவின் கனவில் தீவிரமாகப் பங்கெடுக்கும் ஒருவராகவும் இருப்பேன். திருமணம் செய்வதற்கான முயற்சிகளில் இருக்கிறேன். அது யார் என்பது விரைவில் உங்களுக்குத் தெரியும்'' என்று கங்கணா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in