ஆமிர் கான் விளம்பர சர்ச்சை: பி.சி.ஸ்ரீராம் சாடல்

ஆமிர் கான் விளம்பர சர்ச்சை: பி.சி.ஸ்ரீராம் சாடல்
Updated on
1 min read

ஆமிர் கான் நடித்துள்ள விளம்பர சர்ச்சைத் தொடர்பாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிரபல தனியார் டயர் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. அந்த விளம்பரத்தில் தோன்றிய பாலிவுட் நடிகர் ஆமிர் கான், ‘சாலைகள் பட்டாசு வெடிப்பதற்காக அல்ல, சாலைகள் கார்களுக்காக’ என்ற ஒரு வசனத்தைப் பேசியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் ஆமிர் கானுக்கும், அந்த டயர் நிறுவனத்துக்கும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

மேலும், பட்டாசு வெடிப்பதற்கு எதிராகப் பேசுகிறார் ஆமிர் கான் என்று மதரீதியாகப் பலரும் விமர்சிக்கத் தொடங்கினார்கள். இந்த விவகாரம் தொடர்பாக பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"சோகம்.. பிரிவை ஏற்படுத்தவும், கவனத்தை ஈர்க்கவும் சமூகp பிரிவினை ஏற்படுத்தப்படுகிறது. இது போன்ற முட்டாள்தனங்களை நாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் இந்த மோசமான மனங்களுக்கு அன்பாலான சிகிச்சை தேவை"

இவ்வாறு பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in