Published : 28 Mar 2016 12:10 PM
Last Updated : 28 Mar 2016 12:10 PM

63-வது தேசிய விருதுகள்: சிறந்த தமிழ்ப் படம் விசாரணை, இளையராஜா, சமுத்திரக் கனிக்கு விருதுகள்

இயக்குநர் வெற்றிமாறனின் 'விசாரணை' படத்துக்காக சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது. சிறந்த பின்னணி இசைக்காக 'தாரை தப்பட்டை' படத்துக்கு இளையராஜாவுக்கு விருது அளித்திருக்கிறார்கள்.

63-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது.

'விசாரணை' படத்துக்கு 3 விருதுகள்

இதில், 'லாக்கப்' என்ற நாவலை மையமாக வைத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'விசாரணை' சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தின் எடிட்டர் கிஷோருக்கு சிறந்த எடிட்டிங்கிற்கான விருது கிடைத்திருக்கிறது. சிறந்த உறுதுணை நடிகருக்கான விருதை சமுத்திரக்கனி வென்றுள்ளார்.

சிறந்த பின்னணி இசைக்கான விருது 'தாரை தப்பட்டை' படத்துக்கு இளையராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில் உருவான 1000வது படம் 'தாரை தப்பட்டை' என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகர் அமிதாப் பச்சன்.. சிறந்த நடிகை கங்கனா ரணவத்

இந்திப் படமான 'பிக்கு' (Piku) படத்தின் நடிப்புக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அமிதாப் பச்சன் பெறுகிறார். 'தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ்' படத்தில் நடித்த கங்கனா ரணவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. கடந்த ஆண்டும் சிறந்த நடிகைக்கான விருதை 'குயின்' படத்திற்காக கங்கனா வென்றார் என்பது நினைவுகூரத்தக்கது.

தேசிய விருதுகள் பட்டியல்

சிறந்த படம்: பாகுபலி

சிறந்த இயக்குநர்: சஞ்சய் லீலா பன்சாலி (பாஜிராவ் மஸ்தானி)

சிறந்த தமிழ்ப் படம்: விசாரணை

சிறந்த நடிகை: கங்கனா ராவத் (தனு வெட்ஸ் மனு, இந்தி)

சிறந்த நடிகர்: அமிதாப் பச்சன் (பிக்கு, இந்தி)

சிறந்த உறுதுணை நடிகர்: சமுத்திரக்கனி (விசாரணை)

சிறந்த உறுதுணை நடிகை: தன்வி ஆஷ்மி (பாஜிராவ் மஸ்தானி, இந்தி)

சிறந்த பாப்புலர் திரைப்படம் - பஜ்ரங்கி பாஜ்யான்

சிறந்த நடன அமைப்பு: ரெமோ டிசோஸா - தீவானி மஸ்தானி என்ற பாடலுக்காக. படம் பாஜிரோ மஸ்தானி

சிறந்த இசையமைப்பு: என்னு நிண்டே மொய்தீன் படத்தில் இடம்பெற்ற காத்திருன்னு காத்திருன்னு பாடலுக்காக எம்.ஜெயச்சந்திரன்

சிறந்த ஆடை வடிவமைப்பு: நானக் ஷா ஃபகிர் திரைப்படத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த ஒப்பனை: நானக் ஷா ஃபகிர் திரைப்படத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த எடிட்டிங்: விசாரணை படத்துக்காக கிஷோர் (மறைவுக்குப் பின்)

சிறந்த திரைக்கதை: பிக்கு படத்துக்காக ஜூஹி சதுர்வேதி மற்றும் ஹிமான்சு சர்மா

சிறந்த ஒளிப்பதிவு: சுதீப் சாட்டர்ஜி - படம்: பாஜிரா மஸ்தானி

சிறந்த பின்னணி இசை: இளையராஜா (தாரை தப்பட்டை)

சிறந்த பின்னணி பாடகி: மொனாலி தாகூர் - பாடல்: மோ மோ கே தாகே

சிறந்த குழந்தைகள் திரைப்படம் - துரந்தோ

சுற்றுச்சூழல் நலன் பேணும் சிறந்த திரைப்படம் - வல்லிய சிறகுள்ள பக்‌ஷிகள்

சமூக பிரச்சனைகள் சார்ந்த சிறந்த திரைப்படம் - நிர்ணயகம் (NIRNAYAKAM)

தேசிய ஒறுமைப்பாட்டை பறைசாற்றியதற்காக நர்கீஸ் தத் விருது பெறும் திரைப்படம்: நாநக் ஷா ஃபகிர்

அறிமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருது பெறும் சிறந்த திரைப்படம்: மஸான் - இயக்குநர்: நீரஜ் கியாவன்

சிறப்பு பரிந்துரை:

ரிங்கு ராஜகுரு - படம்: சாய்ராட்

ஜெயசூர்யா - SU SU SUDHI VATHMEEKAM & LUKKA CHUPPI

ரித்திகா சிங் - படம்: இறுதிச் சுற்று

சிறந்த திரைப்படம், சிறப்பு தேர்வு - மொழி வாரியாக:

சிறந்த போடோ மொழிப்படம்: தவ் ஹூதுனி மெத்தாய்

சிறந்த காஷி மொழிப்படம்: ஒனாத்தா

சிறந்த ஹர்யான்வி மொழிப்படம்: சத்ராங்கி

சிறந்த வாஞ்சோ மொழிப்படம்: தி ஹெட் ஹன்டர்

சிறந்த மிசோ மொழிப்படம்: கிமாஸ் லோட் பியாண்ட் தி கிளாஸ்

சிறந்த மணிப்புரி மொழிப்படம்: எய்புசு யோஹன்பியு

சிறந்த மாய்திலி மொழிப்படம்: மிதிலா மக்கான்

சிறந்த சம்ஸ்கிருத மொழிப்படம்: பிரியமானஸம்

சிறந்த தெலுங்கு மொழிப்படம்: காஞ்சி

சிறந்த பஞ்சாபி மொழிப்படம்: சவுதிகூட்

சிறந்த ஒடியா மொழிப்படம்: பஹதா ரா லூஹா

சிறந்த மராட்டிய மொழிப்படம்: ரிங்கன்

சிறந்த மலையாள மொழிப்படம்: பதேமரி

சிறந்த கொங்கனி மொழிப்படம்: எனிமி

சிறந்த கன்னட மொழிப்படம்: தித்தி

சிறந்த இந்தி மொழிப்படம்: தம் லகா கே ஹைசா

சிறந்த வங்காள மொழிப்படம்: சங்காசில்

சிறந்த அசாமி மொழிப்படம்: கோத்தனோடி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x