

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில், இங்குள்ள சிலர் தலிபான்களின் வெற்றியை கொண்டாடும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பிரபல பாலிவுட் நடிகர் நசீருதின் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வீடியோபதிவை வெளிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி மீண்டும் அமைவது ஒட்டுமொத்த உலகையே கவலைஅடையச் செய்துள்ளது. அப்படி இருக்கும்போது, அந்தக் காட்டுமிராண்டிகளின் வெற்றியை இந்திய முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் கொண்டாடுவது மிகவும் ஆபத்தானது. தலிபான்களின் வெற்றியைகொண்டாடும் இந்திய முஸ்லிம்கள், நமது மதத்தை சீர்படுத்த வேண்டுமா அல்லது பழமையான காட்டுமிராண்டிதனத்துடன் வாழ வேண்டுமா என்று சிந்திக்க வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும் இஸ்லாம் மதத்துக்கும், இந்தியாவின் இஸ்லாம் மதத்துக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.-பிடிஐ