

போதைப் பொருள் வைத்திருந்த தாக பாலிவுட் நடிகர் அர்மான் கோலியை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) போலீ ஸார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் அர்மான் கோலி. பாலிவுட் நடிகரான இவர், இந்தியில் நடிகர் சல்மான் கான் நடத்திய பிக்பாஸ் உள்ளிட்ட டி.வி. ஷோக்களில் பங்கேற்று பிரபலம் ஆனவர். சல்மான் கானுடன் பிரேம் ரத்தன் தன் பாயோ என்ற படத்திலும் நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்றவர்.
கோகைன் போதைப் பொருள்
இந்நிலையில் மும்பை அந்தேரியில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் என்சிபி போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டிலிருந்து கோகைன் என்ற போதைப் பொருள் சிறிய அளவில் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக போலீஸார் அவரிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப் பின் முரணான தகவலை அளித்துள்ளார். இதை யடுத்து அர்மான் கோலி கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்ட விவரத்தை நேற்று காலையில் போலீஸார் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். இந்நிலையில் அர்மான் கோலியை இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக என்சிபி போலீஸார் தெரிவித்தனர்.
டி.வி. நடிகர் கவுரவ் தீக்சித்தை போலீஸார் கடந்த வெள்ளிக்கிழமை போதைப் பொருள் வழக்கில் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அர்மான் கோலியும் கைது செய்யப்பட்டுள்ளார். - பிடிஐ