ஷாரூக் கான் - அட்லீ படத்தில் இணைந்த சான்யா மல்ஹோத்ரா - முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம்

ஷாரூக் கான் - அட்லீ படத்தில் இணைந்த சான்யா மல்ஹோத்ரா - முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம்
Updated on
1 min read

ஷாரூக் கான் - அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சான்யா மல்ஹோத்ரா ஒப்பந்தமாகியுள்ளா

கரோனா அச்சுறுத்தல் முடிந்து படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டவுடன் பல்வேறு படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ‘ஜீரோ’ படத்துக்குப் பிறகு ஷாரூக் கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புப் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இப்படத்தை அட்லி இயக்கி வருகிறார். நயன்தாரா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை எனினும் தொடர்ந்து இப்படம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சான்யா மல்ஹோத்ரா ஒப்பந்தமாகியுள்ளார். அவரது கதாபாத்திரம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. டங்கல் படத்தின் ஆமிர்கானின் மகளாக நடித்ததன் மூலம் சான்யா மல்ஹோத்ரா பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ‘பக்லைட்’, ‘போட்டோகிராப்’, ‘லூடோ’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in