தயாரிப்பாளராக மாறிய கரீனா கபூர்

தயாரிப்பாளராக மாறிய கரீனா கபூர்
Updated on
1 min read

ஹன்சல் மேத்தா இயக்கவுள்ள ஒரு படத்தை கரீனா கபூர் தயாரிக்கிறார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். 2000-ம் ஆண்டு வெளியான ‘ரெஃப்யூஜீ’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர் கடந்த 21 ஆண்டுகளில் ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடிகர் சைஃப் அலி கானைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது பிரசவ கால அனுபவங்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார் கரீனா கபூர். இந்நிலையில் தற்போது அடுத்தகட்டமாகத் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.

‘ஸ்கேம் 1992’ இயக்குநர் ஹன்சல் மேத்தா இயக்கவுள்ள ஒரு புதிய படத்தை கரீனா கபூர் மற்றும் ஏக்தா கபூர் இணைந்து தயாரிக்கின்றனர். ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற உள்ளது. ஏக்தா கபூருடன் இணைந்து தயாரிப்பது தனக்குப் பெருமை என்று கூறியுள்ள கரீனா கபூர், ஹன்சல் மேத்தா உடன் முதல் முறை இணைவதால் என்பதால் இது விசேஷமான படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது ஆமிர் கான் உடன் ‘லால் சிங் சத்தா’ படத்தில் கரீனா கபூர் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in