

சினிமா வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை கட்டாயப்படுத்தி ஆபாசப்படங்களில் நடிக்க வைத்து, பின்னர் அப்படங்களை செல்போன் செயலி மூலம் விநியோகம் செய்து கோடி கோடியாய் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, அவரது உதவியாளர் ரயான் தோப்ரே உள்ளிட்ட 11 பேரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் போலீஸார் நேற்று மும்பை நீதிமன்றத்தில் முன்வைத்த வாதத்தில், “ராஜ் குந்த்ராவிடம் இருந்து பெரு மளவு ஆபாச வீடியோக்களை கைப் பற்றியுள்ளோம். ‘ஹாட்ஷாட்ஸ்’ செல்போன் செயலியில்வெளியிடப்பட்ட 35 வீடியோக்கள் உட்பட 51 வீடியோக்கள் மடிக்கணினி ஒன்றில் இருந்தன.
இந்த வீடியோக்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என சோதித்து வருகிறோம். குந்த்ராவின் கணினிகளில் இருந்து அழிக்கப்பட்ட தகவல்களை மீட்க முயன்று வருகிறோம். ‘ஹாட்ஷாட்ஸ்’ செயலிக்காக குந்த்ராவின் உதவியாளர் தோப்ரே 4 மின்னஞ்சல் ஏற்படுத்தியது குறித்தும் விசாரிக் கப்பட வேண்டும்” என்று தெரி வித்தனர்.
இதையடுத்து ராஜ் குந்த்ரா, ரயான் தோப்ரே ஆகிய இரு வரையும் ஜூலை 27-ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
குந்த்ராவின் வங்கிக் கணக்கில் பெருமளவு பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதை போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
இந்த வகையில், ஆபாசப்பட விற்பனை மூலம் கிடைத்த பணம் ஆன்லைன் சூதாட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனசந்தேகிக்கின்றனர். இதுவரை ரூ.7.5 கோடியை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.