‘ஒரே ஒரு கங்கணாதான்’ - டாப்ஸியைச் சாடிய ரங்கோலி

‘ஒரே ஒரு கங்கணாதான்’ - டாப்ஸியைச் சாடிய ரங்கோலி
Updated on
1 min read

‘ஹசீனா தில்ருபா’ படத்தில் டாப்ஸிக்கு பதில் அதிதி ராவ் ஹைதரியை நடிக்க வைத்திருக்கலாம் என்று கங்கணாவின் சகோதரி ரங்கோலி தெரிவித்துள்ளார்.

டாப்ஸி நடிப்பில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள படம் ‘ஹசீனா தில்ருபா’. வினில் மேத்யூ இயக்கியுள்ள இப்படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். கடந்த வாரம் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் டாப்ஸிக்கு பதில் அதிதி ராவ் ஹைதரியை நடிக்க வைத்திருக்கலாம் என்று நடிகை கங்கணாவின் சகோதரி ரங்கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''அதிதி ராவ் ஹைதரி போன்ற அழகான மற்றும் திறமையான நடிகைகளுக்கு ஏன் ‘ஹசீனா தில்ருபா’ போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை என்று எனக்குப் புரியவில்லை. காதலுக்கு ஏங்கக்கூடிய, அதே நேரத்தில் பாதிக்கப்படக்கூடிய, பலவீனமான ஒரு மனைவி கதாபாத்திரத்துக்கு அவர் பொருத்தமானவராக இருப்பார்.

ஏன் டாப்ஸியைத் தேர்வு செய்கிறீர்கள்? இந்தப் பாத்திரத்துக்கு அவர் மிகவும் வலிமையானவராக இருக்கிறார். ஒரே ஒரு கங்கணாதான் என்பதைத் திரைத்துறை புரிந்துகொள்ள வேண்டும். நிச்சயமாக இன்னொரு கங்கணா இருக்க முடியாது. மற்ற திறமையாளர்களையும் பாருங்கள். தவறான நடிகர் தேர்வின் மூலம் திரைப்படங்களை நாசமாக்காதீர்கள்''.

இவ்வாறு ரங்கோலி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in