உடல் எடைக் குறைப்பு; தீபாவளி வரை இலக்கு: சமீரா ரெட்டி பகிர்வு

உடல் எடைக் குறைப்பு; தீபாவளி வரை இலக்கு: சமீரா ரெட்டி பகிர்வு
Updated on
1 min read

உடல் எடைக் குறைப்பு குறித்தும், தீபாவளி வரை இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் நடிகை சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பாலிவுட்டின் பிரபல நடிகை சமீரா ரெட்டி. தமிழில் ‘வாரணம் ஆயிரம்’, ‘வெடி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் உடற்பயிற்சி, யோகா குறித்த வீடியோக்கள், ஆலோசனைகளை வழங்கி வருகிறார். குழந்தை பிறந்தபின் உடல் எடை அதிகரித்திருந்த சமீரா ரெட்டி, மீண்டும் எடையைக் குறைத்தார். தற்போது இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து சமீரா ரெட்டி கூறியுள்ளதாவது:

''புகைப்படங்கள் தவறான பிம்பத்தை ஏற்படுத்தக் கூடும். நீங்கள் பார்ப்பது உண்மையாக இருக்காது என்பதை நான் நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன். ஆம், நான் உடற்பயிற்சி செய்கிறேன். அதற்கான பலன்களும் கிடைக்கின்றன. ஆனாலும் எனக்குத் தொப்பையும், கொழுப்பும் இருக்கின்றன. அவை இன்னும் சில மாதங்களில் மறைந்துவிடும். உண்மையான புகைப்படங்களைப் பார்ப்பது எனக்கு மிகுந்த ஊக்கத்தைத் தருகிறது. இது என்னை அதிக உடற்பயிற்சி செய்யவும், கடினமாக உழைக்கவும் தூண்டுகிறது.

எடைக் குறைப்புக்கு இடைவெளியுடன் கூடிய உண்ணாவிரதம், இனிப்புக் கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு மிகுந்த யோகா ஆகியவற்றைப் பின்பற்றி வருகிறேன். அத்துடன் வாரத்தில் நான்கு முறை பேட்மிண்டன் ஆடுகிறேன். இதைத் தொடர்ந்து செய்வேன் என்று நம்பிக்கை இருக்கிறது. இந்த தீபாவளி வரை இலக்கு நிர்ணயித்துள்ளேன்''.

இவ்வாறு சமீரா ரெட்டி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in