இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிக்கத் தயாராகும் கங்கணா 

இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிக்கத் தயாராகும் கங்கணா 
Updated on
1 min read

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகும் படத்துக்காக முழு உடல் பரிசோதனை மேற்கொண்டதாக நடிகை கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘எமெர்ஜன்ஸி’ என்ற படம் தயாராகிறது. இதில் இந்திரா காந்தியாக நடிகை கங்கணா ரணாவத் நடிக்கவுள்ளார். இப்படம் எமர்ஜென்ஸி காலகட்டத்தில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாகவுள்ளது. இப்படத்தை கங்கணாவே தயாரிக்கவும் செய்கிறார்.

இந்திரா காந்தி கதாபாத்திரத்துக்காக முழு உடல் பரிசோதனை மேற்கொண்டதாக கங்கணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.

தனது பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

''ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு புதிய பயணத்தின் அழகிய தொடக்கம். இன்று நாங்கள் ‘எமர்ஜென்ஸி’ படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்துக்காக உடல், முகம் பரிசோதனையின் மூலம் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகிறோம். இந்தக் கனவை நனவாக்க பல்வேறு அற்புதமான கலைஞர்கள் ஒன்றிணைய உள்ளனர். இது மிகவும் சிறப்புமிக்க ஒரு பயணமாக இருக்கப்போகிறது''.

இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.

தமிழில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி' படத்தில் கங்கணா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்தியில் ’தாக்கட்’, ’தேஜாஸ்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in