சபாஷ் டாப்ஸி!

சபாஷ் டாப்ஸி!
Updated on
1 min read

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் திட்டங்கள், நடவடிக்கைகள் என எதுவாக இருந்தாலும், அதற்கு எதிரான தன்னுடைய குரலைப் பதிவு செய்பவர் நடிகை டாப்ஸி பன்னு.

“என்னை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கும் எந்த விஷயத்துக்கும் என்னுடைய கருத்தைப் பதிவு செய்வதைச் சிறுவயதிலிருந்தே நான் செய்துவருகிறேன்” என்கிறார்.

டாப்ஸி, நடிப்பதோடு தன்னுடைய தங்கையோடு இணைந்து தொழில்முனைவோராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். பிரிமியர் பேட்மிண்டன் லீக் போட்டியில் விளையாடும் ‘புனே 7 ஏஸஸ்’ அணி இவருடையதுதான். அதோடு தன்னுடைய தங்கை ஷாகுனோடு இணைந்து ‘தி வெட்டிங் ஃபாக்டரி’ என்னும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தையும் நடத்துகிறார்.

நடிப்புத் துறையிலும் வித்தியாசமான பாத்திரங்களில் ஐந்து திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தடகள வீராங்கனையாக ‘ராஷ்மி ராக்கெட்’, திகில் பாணித் தமிழ்ப் படமான `ஜனகனமண’, லூப் லபேடா (பிரபலமான ஜெர்மன் படமான ‘ரன் லோலா ரன்’ படத்தின் தழுவல்), அனுராக் காஷ்யப்பின் ‘தோபாரா’, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் பயோபிக் படமான 'சபாஷ் மித்து' ஆகிய படங்கள் அடுத்தடுத்து டாப்ஸி நடித்து 2021-ல் வெளிவர உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in