முடிவில் மாற்றம்: திரையரங்குகளில் வெளியாகிறது பெல் பாட்டம்

முடிவில் மாற்றம்: திரையரங்குகளில் வெளியாகிறது பெல் பாட்டம்
Updated on
1 min read

ஓடிடி வெளியீடு என்ற முடிவிலிருந்து மாறி, திரையரங்குகளில் வெளியாகிறது 'பெல் பாட்டம்'.

1980-களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள படம் 'பெல் பாட்டம்'. ரஞ்சித் எம்.திவாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், வாணி கபூர், ஹியூமா குரோஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கரோனா முதல் அலையின்போது லண்டனில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பியது படக்குழு.

இந்தப் படத்தை வஷு பாக்னானி, ஜக்கி பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், மோனிஷா அத்வானி, மது போஜ்வானி, நிகில் அத்வானி எனப் பலரும் இணைந்து தயாரித்துள்ளனர். அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டாலும், திரையரங்குகளைத் திறப்பதில் தாமதமாவதால் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு.

அமேசான் நிறுவனம் இந்தப் படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியது. ஆனால், தற்போது ஜூலையில் திரையரங்குகள் திறப்பதற்கான சூழல் உருவாகியுள்ளதால் 'பெல் பாட்டம்' படக்குழுவினர் முடிவை மாற்றியுள்ளனர். ஜூலை 27-ம் தேதி 'பெல் பாட்டம்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த முடிவினால் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in