தொடர்ந்து தள்ளிப்போன படப்பிடிப்பு: சல்மான் கான் படத்துக்கான அரங்கங்கள் கலைப்பு

தொடர்ந்து தள்ளிப்போன படப்பிடிப்பு: சல்மான் கான் படத்துக்கான அரங்கங்கள் கலைப்பு
Updated on
1 min read

'ஏக் தா டைகர் 3'ஆம் பாகத்தின் படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட அரங்குகள் கலைக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பு தேதிகள் குறித்து சரியானத் தெளிவில்லை என்பதால் இது நடந்ததாகத் தெரிகிறது

சல்மான் கான், கேத்ரீனா கைஃப் நடிப்பில் 'ஏக் தா டைகர்' திரைப்படத்தின் மூன்றாம் பாகமான பாகமான 'டைகர் 3', இந்த வருடம் மார்ச் மாதம் படப்பிடிப்புடன் துவங்கவிருந்தது.

ஆனால் கேத்ரீனாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் மகாராஷ்டிர அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியதால் படப்பிடிப்பு மொத்தமாகத் தடைபட்டது.

இந்தப் படப்பிடிப்புக்காக கோர்காவுன் பகுதியில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் உருவான புயலால் இந்த அரங்கம் சற்று சேதமடைந்தது. இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா, இந்த அரங்கைக் கலைத்துவிட முடிவு செய்துள்லார்.

ஜூன் இரண்டாம் வாரம் வரை அம்மாநிலத்தில்ன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் எப்போது படப்பிடிப்பு நடக்கும் என்பதில் தெளிவு கிடைக்காத நிலையில் வீணாக அந்த இடத்துக்கான வாடகையைத் தர வேண்டாம் என்று தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளது.

படப்பிடிப்புக்கு எல்லாம் தயாராக இருக்கும் போது மீண்டும் அரங்கம் அமைக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் கிட்டத்தட்ட 300 பேர் கொண்ட இந்த ஒட்டுமொத்த படக்குழுவும் தடுப்பூசி போட்ட பின்னரே படப்பிடிப்பு என்பதிலும் ஆதித்யா சோப்ரா உறுதியாக இருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in