வெள்ள நிவாரணத்துக்காக அக்‌ஷய் குமார் ரூ.1 கோடி நிதியுதவி

வெள்ள நிவாரணத்துக்காக அக்‌ஷய் குமார் ரூ.1 கோடி நிதியுதவி
Updated on
1 min read

வெள்ள நிவாரணத்துக்கு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.1 கோடி நிதியளித்துள்ளார்.

தமிழகத்தின் கனமழை பாதிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிதி வந்து சேருகிறது. தெலுங்கு திரையுலகம் ‘மன மெட்ராஸ் கோசம்’ என்ற பெயரில் அங்குள்ள கலையுலகத்தினரிடம் நிவாரண உதவிகளை சேகரித்து வருகிறது. அதை தெலுங்கு நடிகர் ராணா ஒருங்கிணைத்து வருகிறார்.

சென்னை மக்களின் நிலைமையைக் கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணிய அக்‌ஷய் குமார் பூமிகா அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.

நடிகர் அக்‌ஷய் குமார் வெள்ள நிவாரணம் தொடர்பாக இயக்குநர் பிரியதர்ஷனைத் தொடர்பு கொண்டு பேசினார். அவர் சுஹாசினி மணிரத்னத்திடம் பேசச் சொல்லியிருக்கிறார்.

சுஹாசினி மணிரத்னத்திடம் பேசிய பிறகு பூமிகா அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி வழங்கியுள்ளார். பூமிகா அறக்கட்டளை சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு கொடுத்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in