

கரோனா தடுப்பூசியின் 2-ம் டோஸை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நேற்று செலுத்திக் கொண்டார்.
நாடெங்கிலும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு கரோனா வைரஸால் நடிகர் அமிதாப் பச்சன் பாதிக்கப்பட்டார். அவருடைய குடும்பத்திலும் சிலருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்ட அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை பெற்றார். பின்னர் கரோனா தொற்றிலிருந்து நடிகர் அமிதாப் பச்சன் மீண்டு வந்தார்.
அவர் மட்டுமல்லாமல் மகன் அபிஷேக் பச்சன், மருமகள் நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரும் கரோனா தொற்றுக்கு ஆளாகினர். தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் அமிதாப் பச்சன் செலுத்திக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து 2-வது டோஸை நேற்று அவர் செலுத்திக் கொண்டார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா தடுப்பூசி 2-ம்டோஸ் செலுத்திக் கொண்டவிவரத்தையும், புகைப்படத்தை யும் வெளியிட்டுள்ளார்.
இதைப் போலவே பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசியின் 2-ம் டோஸை போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.