நான் நலமாக இருக்கிறேன்; கோவிட்-19 தொற்று இல்லை: நடிகர் முகேஷ் கண்ணா

நான் நலமாக இருக்கிறேன்; கோவிட்-19 தொற்று இல்லை: நடிகர் முகேஷ் கண்ணா
Updated on
1 min read

தான் நலமாக இருப்பதாகவும், தனக்கு கோவிட்-19 தொற்று இல்லை என்றும் நடிகர் முகேஷ் கண்ணா கூறியுள்ளார்.

மகாபாரதம், சக்திமான் உள்ளிட்ட தொடர்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் முகேஷ் கண்ணா. குறிப்பாக சக்திமான் கதாபாத்திரத்தை இயக்கி, நடித்தது இவருக்கு மொழிகளைக் கடந்து அங்கீகாரம் பெற்றுத் தந்தது. 90களின் குழந்தைகளுக்குப் பிடித்த சூப்பர்ஹீரோவாக சக்திமான் இருந்தார்.

இந்நிலையில், தற்போது 62 வயதான முகேஷ் கண்ணா கோவிட்-19 தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதாகவும், அவர் காலமானதாகவும் கூட திடீரென செய்திகள் இணையத்தில் பரவ ஆரம்பித்தன. இதற்கு மறுப்பு தெரிவித்து முகேஷ் கண்ணா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இதில், "நான் நல்ல நலத்துடன் இருக்கிறேன் என்பதை உங்களிடம் சொல்லவே இங்கு வந்தேன். புரளிகளுக்கு மறுப்பு தெரிவிக்கச் சொன்னார்கள். அதைச் செய்ய விரும்புகிறேன். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். எனக்கு உங்கள் ஆசீர்வாதங்கள் இருக்கின்றன.

உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி. நிறைய அழைப்புகள் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன. அதனால்தான் நான் நலத்துடன் இருப்பதை என் ரசிகர்களுக்குத் தெரிவிக்கலாம் என்று இங்கு வந்தேன். உங்கள் ஆசீர்வாதங்களுடன் நான் நலமாக, பாதுகாப்பாக இருக்கிறேன்.

எனக்கு கோவிட்-19 தொற்று இல்லை, மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை. பொய்யான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்" என்று முகேஷ் கண்ணா பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in