மீண்டும் ஒளிபரப்பாகும் ‘ராமாயணம்’ தொடர்

மீண்டும் ஒளிபரப்பாகும் ‘ராமாயணம்’ தொடர்
Updated on
1 min read

ராமானந்த் சாகர் தயாரிப்பில் உருவான ‘ராமாயணம்’ தொடர், 1987-ம் ஆண்டில் தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரந்தோறும் ஒளிபரப்பானது.

இதில் இந்தி நடிகர் அருண் கோவில் ராமராகவும், நடிகை தீபிகா சீதையாகவும், குத்துச்சண்டை வீரர் தாரா சிங் அனுமனாகவும் நடித்திருந்தனர். அப்போதே, நாடு முழுவதும் கோடிக் கணக்கானோர் இந்தத் தொடரைப் பார்த்தனர்.

கடந்த ஆண்டு பொதுமுடக்கம் அமலபடுத்தப்பட்டபோது, வீட்டில் இருக்கும் மக்கள் பார்க்க வசதியாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி ‘ராமாயணம்’ தொடரை 33 ஆண்டுகளுக்குப் பின் மறு ஒளிபரப்பு செய்தது.

உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற உலக சாதனையை ‘ராமாயணம்’ தொடர் படைத்துள்ளதாக தூர்தர்ஷன் தனது அதிகாரபூர்வ ட்விட்டரில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது இத்தொடர் கலர்ஸ் தொலைகாட்சியில் நேற்று (மே 06) முதல் மீண்டும் ஒளிபரப்பாகிறது. இதனால் ராமாயணம் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட் ஆனது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in