தயாரிப்பாளராகக் களமிறங்கும் கங்கணா

தயாரிப்பாளராகக் களமிறங்கும் கங்கணா
Updated on
1 min read

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ளார். இவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏப்ரல் 23-ம் தேதி திரையரங்குகளில் 'தலைவி' வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், கரோனா பரவலால் ‘தலைவி’ படத்தின் வெளியீட்டைத் தேதி குறிப்பிடாமல் படக்குழுவினர் ஒத்திவைத்தனர்.

நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த கங்கணா, தற்போது தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். தனது மணிகர்னிகா பிலிம்ஸ் சார்பில் ‘டிக்கு வெட்ஸ் ஷெரு’ என்ற படத்தைத் தயாரிக்கவுள்ளார். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கங்கணா கூறியுள்ளதாவது:

'' ‘டிக்கு வெட்ஸ் ஷெரு’ படத்தின் மூலம் மணிகர்னிகா பிலிம்ஸ் டிஜிட்டல் தளத்தில் நுழைகிறது. இப்படம் நகைச்சுவை கலந்த ஒரு காதல் கதை. டிஜிட்டல் தளத்தில் இன்னும் அதிகமான சிறப்பான மற்றும் தரப்பான படைப்புகளை நாங்கள் வழங்கவுள்ளோம்.

புதிய கதைகளையும், புதிய கலைஞர்களையும் அறிமுகம் செய்யவுள்ளோம். சராசரி சினிமா பார்வையாளர்களை விட டிஜிட்டல் பார்வையாளர்கள் சற்று பரிணாமம் அடைந்திருந்திருப்பதாகக் கருதுகிறோம்''.

இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in