நடிகர் சோனு சூட்டுக்கு கரோனா தொற்று உறுதி: ட்விட்டரில் பகிர்வு

நடிகர் சோனு சூட்டுக்கு கரோனா தொற்று உறுதி: ட்விட்டரில் பகிர்வு
Updated on
1 min read

நடிகர் சோனு சூட்டுக்கு தனக்கு கரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

கடந்த வருடம் கரோனா நெருக்கடி காரணமாக பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப சோனு சூட் போக்குவரத்து உதவிகளைச் செய்தார். மேலும், அத்தகைய தொழிலாளர்களுக்காகத் தனியாக வேலைவாய்ப்புத் தளம் ஒன்றையும் ஆரம்பித்தார்.

இவற்றோடு கல்வி உதவித்தொகை, ஸ்மார்ட்போன்கள், மொபைல் டவர் அமைப்பு என கடந்த வருடத்திலிருந்து இன்றைய தேவி வரை எண்ணற்ற உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாகத் தொற்று எண்ணிக்கை இந்தியா முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றால் மும்பையில் வசித்து வரும் பல பாலிவுட் பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரன்பீர் கபூர், ஆலியா பட், ஆமிர் கான், கோவிந்தா, அக்‌ஷய் குமார், கேத்ரீனா கைஃப் உள்ளிட்ட நடிகர்கள் கடந்த வாரங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்த வரிசையில் தற்போது சோனு சூடுக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இது குறித்து ட்விட்டரில், "கோவிட் தொற்று உறுதி. மன நிலை அதை விட உறுதியாக இருக்கிறது. அனைவருக்கும் வணக்கம், இன்று காலை எனக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் ஏற்கனவே என்னைத் தனிமைபடுத்திக் கொண்டு விட்டேன். அதிக அக்கறையோடு இருக்கிறேன். ஆனால் கவலை வேண்டாம். உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க இது எனக்கு அதிக நேரத்தைத் தந்திருக்கிறது. உங்களுக்காக நான் என்றும் இருப்பேன் என்பதை மறக்காதீர்கள்" என்று சோனு சூட் பகிர்ந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in