

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'கத்தி' திரைப்படம் இந்தியில் ரீமேக்காக இருக்கிறது. நாயகனாக நடிக்க அக்ஷய்குமார் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கத்தி'. அனிருத் இசையமைத்த இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்தது. 2014ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் இந்தி ரீமேக் தற்போது உறுதியாகி உள்ளது. லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் இந்தி ரீமேக்கை தயாரிக்க இருக்கிறார். விஜய் வேடத்தில் அக்ஷய்குமார் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஜெகன் இயக்க இருக்கிறார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'துப்பாக்கி' படத்தின் இந்தி ரீமேக்கிலும் அக்ஷய்குமார் தான் நாயகனாக நடித்தார். தற்போது அதே கூட்டணியில் உருவான 'கத்தி' ரீமேக்கிலும் அக்ஷய்குமார் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.