

அக்ஷய்குமார், சாரா அலிகானுடன் இணைந்து நடித்து வந்த ‘அத்ரங்கி ரே’ இந்தி படத்தில் தனுஷ் நடிக்கும் பகுதிகள் முடிந்துவிட்டன. இதை அடுத்து, சில நாட்களாக ‘தி க்ரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இப்படத்துக்காக அவர் ஜூலை வரை அமெரிக்காவில் தங்குகிறார். இந்நிலையில், ‘அத்ரங்கி ரே’ இந்தி படத்தின் முழு படப்பிடிப்பும் தற்போது முடிந்துள்ளது. இதுதொடர்பாக படத்தின் நாயகி சாரா அலிகான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
‘‘முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. படத்தில் எனக்கு அளித்த பாத்திரத்துக்கும், வாய்ப்புக்கும் இயக்குநர் ஆனந்த் ராய்க்கு நன்றி. அதிகாலை சூரியன், ரம்மியமான மாலைப்பொழுது என இந்த ஆண்டு நிறைய ரசிக்க முடிந்தது. என்னுடன் நடித்த தனுஷுக்கும் நன்றி. நல்ல ஊக்கம், அன்பை பரிசளித்தார். தென்னிந்திய உணவு வகைகளை அறிமுகப்படுத்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். நல்ல இசை குறித்து நிறைய உரையாடினோம். அவ்வளவு மகிழ்ச்சியும், அன்பாகவும் இருந்தது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.