

ட்விட்டர் பக்கத்தில் பாலிவுட் நடிகை கங்கனா நேற்று கூறியுள்ளதாவது:
நான் குழந்தையாக இருந்த போது எனது பெற்றோருக்கே விரும்பத்தகாத குழந்தையாக இருந்தேன். ஏனென்றால் நான் பிறந்த சமயத்தில்தான் எனது பெற்றோரின் ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டது. அதனால் என்னை வெறுப்புடன் வளர்த்து வந்தனர்.
ஆனால் இப்போது என்னை உலகின் மிகச் சிறந்த நடிகை என்று போற்றுகின்றனர். பணத்துக்காகவும், புகழுக்காகவும் நான் நடிக்க வரவில்லை. இந்த கேரக்டரை உன்னால்தான் செய்ய முடியும் என்று தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் நம்புகிறார்கள் அல்லவா. அதுதான் எனக்குப் பெருமை. நான் ஒரு காலத்தில் விரும்பத்தகாத குழந்தையாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது நான் உலகம் போற்றும் நடிகையாகிவிட்டேன். இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
இவ்வாறு கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
தமிழில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தில் கங்கனா நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இந்தியில் தாக்கட், தேஜாஸ் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.