ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் புகைப்படம் வெளியிட்டு பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு பாராட்டு

நடிகர் சோனு சூட்டின் புகைப்படத்தை தனது போயிங் 737 விமானத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நடிகர் சோனு சூட்டின் புகைப்படத்தை தனது போயிங் 737 விமானத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Updated on
1 min read

பாலிவுட் படங்களில் வில்லனாக நடித்து வருபவர் நடிகர் சோனு சூட். படங்களில் வில்லனாக நடித்து வரும் சோனு சூட், நிஜத்தில் ஹீரோவாக புகழ் பெற்று வருகிறார்.

கரோனா வைரஸால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். விவசாயிக்கு டிராக் டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி உள்ளிட்ட உதவிகள் செய்தார்.

இதனிடையே நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக போற்றப்பட்டு வரும் சோனு சூட்டின் சேவையைப் பாராட்டி ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனம் தனது போயிங் 737 விமானத்தில் அவரது புகைப்படத்தை வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும் அனைவரையும் காத்த மீட்பருக்கு வணக்கம் என்றும் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளது.

இதைப் பார்த்த பின்னரே, நடிகர் சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். சோனு சூட்டின் தாயார் 2007-லும், தந்தை 2016-லும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in