’ஆதிபுருஷ்’ அப்டேட்: பிரபாஸுக்கு நாயகியாக கீர்த்தி சனோன் ஒப்பந்தம்

’ஆதிபுருஷ்’ அப்டேட்: பிரபாஸுக்கு நாயகியாக கீர்த்தி சனோன் ஒப்பந்தம்
Updated on
1 min read

'ஆதிபுருஷ்' படத்தில் பிரபாஸுக்கு நாயகியாக நடிக்க கீர்த்தி சனோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள படம் 'ஆதிபுருஷ்'. இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்படும் இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்து வருகிறார்கள்.

டிசீரிஸ் நிறுவனம் மற்றும் ரெட்ரோபிலீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி 'ஆதிபுருஷ்' வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

தற்போது இந்தப் படத்தில் பிரபாஸுக்கு நாயகியாக கீர்த்தி சனோன் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் சன்னி சிங்கும் நடிக்கவுள்ளார். இருவருமே படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

முழுக்க க்ரீன் மேட்டில் படமாக்கப்பட்டு, சர்வதேச கிராபிக்ஸ் நிறுவனங்களைக் கொண்டு அதி நவீன விஷுவல் எஃபெக்ஸ் காட்சிகளைப் படக்குழுவினர் உருவாக்கவுள்ளனர். ஒருபுறம் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இன்னொரு புறம் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in