ஹெல்மெட் அணியாமல் பைக் பயணம்- ரூ.500 அபராதம் கட்டிய விவேக் ஓபராய்

ஹெல்மெட் அணியாமல் பைக் பயணம்- ரூ.500 அபராதம் கட்டிய விவேக் ஓபராய்
Updated on
1 min read

கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று தன் மனைவி பிரியங்காவை பைக்கில் பின்னால் அமர வைத்துச் செல்லும் வீடியோ ஒன்றை பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் விவேக ஓபராய் மற்றும் அவரது மனைவி பிரியங்கா இருவருமே ஹெல்மெட், முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. மேலும் அவரது ரசிகர்கள் பலரும் அவர்களோடு முகக்கவசம் அணியாமல் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

இதனைக் குறிப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் விவேக் ஓபராயை கடுமையாக விமர்சித்து வந்தனர். முகக்கவசம் மற்றும் ஹெல்மெட் அணியாத இருவருக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று மும்பை காவல்துறை, மும்பை மாநகராட்சி உள்ளிட்ட ட்விட்டர் கணக்குகளை நேரடியாக டேக் செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று (20.02.21) விவேக் ஓபராய் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

காதல் எங்களை எங்கே கொண்டு சென்றுவிட்டது பாருங்கள். ஒரு புதிய பைக்கில நாங்கள் எங்கள் பயணத்தை தொடங்கினோம். ஆனால் ஹெல்மெட் இல்லாததால் 500 ரூபாய் அபராதம் கட்ட வேண்டியதாகி விட்டது. ஹெல்மெட் இல்லாமல் பைக் பயணமா? மும்பை போலீஸார் செக்மேட் வைக்கின்றனர். எப்போதும் பாதுகாப்புதான் முக்கியம் என்று எனக்கு உணர்த்திய மும்பை போலீஸாருக்கு நன்றி. பாதுகாப்பாக இருங்கள். ஹெல்மெட் மற்றும் முகக்கவசம் அணியுங்கள்.

இவ்வாறு விவேக் ஓபராய் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in