வீட்டை ஓட்டலாக மாற்றியதாக இந்தி நடிகர் சோனு சூட் மீது மும்பை மாநகராட்சி புகார்

வீட்டை ஓட்டலாக மாற்றியதாக இந்தி நடிகர் சோனு சூட் மீது மும்பை மாநகராட்சி புகார்
Updated on
1 min read

குடியிருப்பு கட்டிடத்தை அனுமதியின்றி ஓட்டலாக மாற்றியதாக இந்தி நடிகர் சோனு சூட் மீது மும்பை மாநகராட்சி போலீஸில் புகார் அளித்துள்ளது.

பாலிவுட் நடிகர் சோனு சூட் கரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப உதவிகளும் அவர்களுக்கு உணவும் அளித்து பாராட்டை பெற்றவர். அவருக்கு மும்பை ஜூஹூ பகுதியில் 6 மாடிக் கட்டிடம் ஒன்று உள்ளது. அந்த 6 மாடிக் கட்டிடத்தைதான் கரோனா காலத்தில் தனிமை முகாம் வசதிகளுக்காக சோனு சூட் அளித்திருந்தார்.

குடியிருப்பாக இருந்த 6 மாடிக் கட்டிடத்தை மாநகராட்சியின் முறையான அனுமதியின்றி ஓட்டலாக மாற்றிவிட்டதாக சோனு சூட் மீது மாநகராட்சி அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக மாநகராட்சி சார்பில் போலீஸிலும் புகார் ளிக்கப்பட்டுள்ளது. புகாரின் மீது விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர். மும்பை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in