

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் ஆர்யா பானர்ஜி. மறைந்த சிதார் கலைஞர் நிகில் பந்தோபாத்யாயா மகளான இவர் வங்கமொழி, பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தி டர்ட்டி பிக்சர்', 'லவ் செக்ஸ் அவுர் தோகா' உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். மாடலிங் துறையிலும் இவர் ஈடுபட்டு வந்தார்.
கொல்கத்தாவிலுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடிகை ஆர்யா வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக அவரது வீடு உட்புறமாக பூட்டியிருந்தது. வீட்டுக்கு அருகில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து நேற்று முன்தினம் கொடுத்த புகாரின் பேரில் வந்த போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஆர்யா பானர்ஜி பிணமாகக் கிடந்தார்.
இதையடுத்து, அவரது உடலை போலீஸார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். - பிடிஐ