அரசியல் வருகை தாமதமானதாக இருந்தாலும் துணிச்சலான அழகான முடிவு: ரஜினிக்கு சத்ருகன் சின்ஹா வாழ்த்து

அரசியல் வருகை தாமதமானதாக இருந்தாலும் துணிச்சலான அழகான முடிவு: ரஜினிக்கு சத்ருகன் சின்ஹா வாழ்த்து
Updated on
1 min read

தமிழகத்திலும், இந்திய சினிமாவிலும் மிகப் பிரபலமான ஒரு சூப்பர் ஸ்டார் அரசியலில் நுழைய எடுத்துள்ள துணிச்சலான மற்றும் அழகான முடிவு என்று ரஜினிக்கு சத்ருகன் சின்ஹா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 12) தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ரஜினி தனது அரசியல் வருகையை உறுதி செய்திருப்பதால், இந்தப் பிறந்த நாள் அவருக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாஜக முன்னாள் எம்.பி.யும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான சத்ருகன் சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"அன்பான நீண்டகால நண்பர் ரஜினிகாந்துக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். ஒரே குணாதிசயங்களைக் கொண்ட இரு பறவைகள் நாங்கள். என்னுடைய மிகப் பிரபலமான மற்றும் அதிகம் பேசப்பட்ட ‘எனிதிங் பட் காமோஷ்’ என்ற சுயசரிதையில் என்னை அவருடைய குரு என்று அவர் அழைத்திருப்பது மிகப்பெரிய விஷயம். நான் மிகவும் நெகிழ்ந்துவிட்டேன், ஆனால், நான் அவருடைய குரு என்றால், அவர் உண்மையான 'குரு காந்தல்' ஆகி விடுவார். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.

தமிழகத்திலும், இந்திய சினிமாவிலும் மிகப் பிரபலமான ஒரு சூப்பர் ஸ்டார் அரசியலில் நுழைய எடுத்துள்ள துணிச்சலான மற்றும் அழகான முடிவு, தாமதமானதாக இருந்தாலும் சிறப்பானது. தன்னுடைய உறுதி, ஈடுபாடு, நேர்மை ஆகியவற்றின் மூலம் மக்களுடைய எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்ற எனது வாழ்த்து மற்றும் பிரார்த்தனைகள்.

அவரது உண்மையான முதுகெலும்பாகச் செயல்படும் அவரது மனைவி லதா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய அன்பு. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். ரஜினி நீடுழி வாழ்க. அவரது ரசிகர்கள், ஆதரவாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்".

இவ்வாறு சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in