

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் சோனாக்ஷி சின்ஹா. ‘தபாங்’, ‘ரவுடி ரத்தோர்’, ‘அகிரா’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தமிழிலும் ரஜினி ஜோடியாக ‘லிங்கா’ படத்தில் நடித்தார்.
திரைப்படங்கள் தவிர்த்து ஸ்கூபா டைவிங் உள்ளிட்ட பொழுதுபோக்குகளிலும் ஆர்வம் கொண்டவர் சோனாக்ஷி சின்ஹா. கடந்த பல ஆண்டுகளாக ஸ்கூபா டைவிங் உரிமத்துக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் நீண்ட முயற்சிக்கு பிறகு சோனாக்ஷி சின்ஹாவுக்கு ஸ்கூபா டைவிங்குக்கான உரிமம் கிடைத்துள்ளது. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து தனது பதிவில் சோனாக்ஷி கூறியிருப்பதாவது:
இப்போது நான் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஸ்கூபா டைவர். இதற்காக பல ஆண்டுகளாக முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக அது எனக்கு கிடைத்து விட்டது. கண்டிப்பு மிகுந்து என்னுடைய பயிற்சியாளர் முஹம்மதுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரை விட சிறந்த ஆசிரியர் எனக்கு கிடைக்க மாட்டார். ஒரு தேர்வில் நான் 100% மதிப்பெண்களை பெறுவது இதுவே முதல்முறை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.