இன்றைய பார்வையாளர்கள் புத்திசாலிகள்; கதையில் நம்பகத்தன்மை வேண்டும்: ‘டோர்பாஸ்’ இயக்குநர்

இன்றைய பார்வையாளர்கள் புத்திசாலிகள்; கதையில் நம்பகத்தன்மை வேண்டும்: ‘டோர்பாஸ்’ இயக்குநர்
Updated on
1 min read

இன்றைய பார்வையாளர்கள் புத்திசாலிகளாக இருப்பதால், படத்தின் கதையில் நம்பகத்தன்மை இருக்க வேண்டும் என்று ‘டோர்பாஸ்’ இயக்குநர் கிரிஷ் மாலிக் கூறியுள்ளார்.

கிரிஷ் மாலிக் இயக்கத்தில் சஞ்சய் தத் நடித்துள்ள படம் ‘டோர்பாஸ்’. இப்படம் வரும் டிசம்பர் மாதம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நர்கிஸ் ஃபக்ரி, ராகுல் தேவ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே வெளியீட்டுக்குக் தயாராக இருந்த இப்படம் ஊரடங்கினால் ஒத்திவைக்கப்பட்டு தற்போது ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது.

இபப்டம் குறித்து இயக்குநர் கிரிஷ் மாலிக் கூறியுள்ளதாவது:

''மக்கள் கற்பனை செய்து பார்த்திராத கதைகளையும், கதாபாத்திரங்களையும் திரையில் கொண்டு வர விரும்புகிறேன். சினிமாவின் மூலம் சொல்லப்படவேண்டியவை இவ்வுலகில் ஏராளம் உள்ளன. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நேர்மையான முறையில் வழங்க விரும்புகிறேன். அதற்குத்தான் எப்போதும் நான் முன்னுரிமை கொடுக்க நினைக்கிறேன். ‘டோர்பாஸ்’ திரைப்படம் நிச்சயமாகப் பார்வையளர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு கதையைச் சொல்வதே நோக்கம். ஏற்ற இறக்கங்களுடன் கூடிய ஒரு ரோலர் கோஸ்டர் பயணமாக இது இருந்தது. எத்தனையோ சவால்களும், தடைகளும் வந்தாலும் இக்கதையைச் சொல்வதற்காக ஆர்வம் மட்டும் குறையவில்லை. இன்றைய பார்வையாளர்கள் புத்திசாலிகள். எனவே, கதையில் நம்பகத்தன்மை இருக்க வேண்டும்''.

இவ்வாறு இயக்குநர் கிரிஷ் மாலிக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in