நட்சத்திர அந்தஸ்தை தலையில் ஏற்றிக்கொள்ளக் கூடாது: அர்ஜுன் கபூர்

நட்சத்திர அந்தஸ்தை தலையில் ஏற்றிக்கொள்ளக் கூடாது: அர்ஜுன் கபூர்
Updated on
1 min read

இந்தக் காலத்தில் நட்சத்திர அந்தஸ்து என்பதை ஒரு நடிகன் தலையில் ஏற்றிக்கொள்ளக் கூடாது என்று அர்ஜுன் கபூர் கூறியுள்ளார்.

கடந்த 8 வருடங்களாகத் திரைத்துறையில் இருந்து வரும் அர்ஜுன் கபூர் தயாரிப்பாளர் போனி கபூரின் மகன். இந்த 8 வருடங்களில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் பாலிவுட்டின் யதார்த்தத்தைப் புரிந்து அமைதியாக இருப்பதே சிறந்தது என்று பேசியுள்ளார்.

"நட்சத்திர அந்தஸ்தை தலையில் ஏற்றிக்கொள்ளக் கூடாது என நினைக்கிறேன். ஏனென்றால் (நடிகர்களின் தலையெழுத்து) ஒரு வெள்ளிக்கிழமையிலிருந்து அடுத்த வெள்ளிக்கிழமையில் நிலை மாறிவிடும். மோசமான படத்தைத் தந்தால் நம்மை விமர்சித்து நடிகனே இல்லை என்பார்கள்.

ஒரே ஒரு வெற்றிப்படத்தில் நம்மை சூப்பர் ஸ்டார் என்பார்கள். இருக்கும் வரை நம் இடத்தை, நம் வேலையை ரசித்துச் செய்ய வேண்டும். அதிகபட்சமாக அதில் ஆழ்ந்துவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். சிறப்பான பணியைத் தர வேண்டும். யாரைப் பற்றியும் எந்தவிதமான விஷயத்தையும் அனுமானிக்கக் கூடாது" என்று அர்ஜுன் கபூர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், 'தி பாய்ஸ்' என்கிற ஆங்கில சீரிஸின் இந்தி டப்பிங் பதிப்பில், பில்லி புச்சர் என்கிற முக்கியமான கதாபாத்திரத்துக்கு அர்ஜுன் கபூர் குரல் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in