ஷாரூக்கானின் 55-வது பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்கள் வாழ்த்து

ஷாரூக்கானின் 55-வது பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்கள் வாழ்த்து
Updated on
1 min read

தனது 55-வது பிறந்த நாளை இன்று கொண்டாடிய நடிகர் ஷாரூக்கானுக்கு சக திரையுலக நண்பர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

"காவேரி காலிங் இயக்கத்துக்காக, ஷாரூக்கானின் பிறந்த நாளை முன்னிட்டு நான் 500 மரங்களை நடுகிறேன். அவருடன் ஜோடியாக நடித்ததிலிருந்து, இணை தயாரிப்பாளராக, இணை உரிமையாளராக (ஐபிஎல் அண்) ஆனது வரை வந்திருக்கிறோம். அதிக மகிழ்ச்சியும், சில துளிக் கண்ணீரும் நிறைந்த நீண்ட, வண்ணமயமான, முக்கியத்துவம் வாய்ந்த பயணம் இது" என்று ஷாரூக்கானின் நெருங்கிய நண்பர் நடிகை ஜூஹி சாவ்லா ட்வீட் செய்துள்ளார்.

நடிகை மாதுரி தீக்‌ஷித், "நாம் எப்போது சந்தித்தாலும் அப்போது உற்சாகம், மாயாஜாலம், நிறைய அன்பும் நிறைந்திருக்கும். உங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள். பாதுகாப்பாக இருங்கள். விரைவில் உங்களைச் சந்திப்பேன் என நம்புகிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.

"பள்ளியில் உங்கள் பாடல்களுக்கு நடனமாடியதிலிருந்து, உங்கள் வீட்டுக்கு வெளியே மணிக்கணக்காகக் காத்திருந்து, பின் ஒரே மேடையில் உங்களுடன் நின்று, உங்களுடன் அற்புதமான உரையாடல்கள் வரை வந்திருக்கிறேன். உங்களுடன் இருந்தது என்றுமே எனக்குக் கவுரவம். நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன். உங்களது நல் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கு என்றும் பிரார்த்திப்பேன்" என நடிகர் ராஜ்குமார் ராவ் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மேலும், சைய்ய சைய்யா பாடலுக்கு தான் நடன ஒத்திகை பார்க்கும் காணொலி ஒன்றையும் ராஜ்குமார் பகிர்ந்துள்ளார்.

நடிகர் ஆயுஷ்மான் குரானா, நடிகைகள் அனுஷ்கா சர்மா, ஷில்பா ஷெட்டி, கரீனா கபூர் உள்ளிட்டோரும் ஷாரூக்கானுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஐபிஎல் தொடரில் தனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு உற்சாகம் அளிக்க, குடும்பத்தினருடன் துபாய் சென்றுள்ளார் ஷாரூக்கான்.

சில நாட்களுக்கு முன், தனது பிறந்த நாளன்று தன் ரசிகர்கள் யாரும் தனது வீட்டுக்கு முன்னால் கூட வேண்டாம் என ஷாரூக் அறிவுறுத்தியிருந்தார். கரோனா தொற்றை மனதில் வைத்து அவர் இதைக் கூறியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in