நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் அம்மாவுக்குக் கரோனா தொற்று உறுதி

நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் அம்மாவுக்குக் கரோனா தொற்று உறுதி
Updated on
1 min read

நடிகர் ஹ்ரித்திக் ரோஷனின் அம்மா பின்கி ரோஷனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கணவர் ராகேஷ் ரோஷன் உறுதி செய்துள்ளார்.

வியாழக்கிழமை அன்று தனது 67வது பிறந்தநாளைக் கொண்டாடிய பின்கி ரோஷனுக்கு கடந்த வாரமே தொற்று இருப்பது தெரிய வந்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து கேட்க ராகேஷ் ரோஷனை தொடர்பு கொண்டபோது, "ஆம் தொற்று இருப்பது உண்மைதான். இப்போதைக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. அவர் வீட்டுத் தனிமையில் இருக்கிறார்" என்று கூறினார்.

முன்னதாக தனது பிறந்தநாளுக்கு தனது குடும்பம் அளித்த ஆச்சரியப் பரிசு குறித்தும், பலூன்கள், பூக்களின் புகைப்படங்களையும் பின்கி ரோஷன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். "எனது குடும்பம் எனது பிறந்தநாளை, இந்த ஆச்சரியத்துடன் கொண்டு வந்துள்ளது" என்று பதிவிட்டிருந்தார்.

ஹ்ரித்திக் ரோஷனின் குடும்பத்தினர் உட்பட வீட்டில் இருக்கும் பணியாளர்கள் என அனைவருக்கும் ஒவ்வொரு 20 நாட்க்ள் கோவிட்-19 பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் சமீபத்தில் செய்த பரிசோதனையில் தான் பின்கி ரோஷனுக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இரண்டு பரிசோதனைகளுக்கும் நடுவில் 20 நாட்கள் இடைவெளி இருப்பதால் இன்னும் சில நாட்களில் தனக்கு தொற்று நீங்கிவிடும் என்று பின்கி ரோஷன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in