ஹேக் செய்யப்பட்ட ஹ்ரித்திக் ரோஷன் முன்னாள் மனைவியின் இன்ஸ்டாகிராம் கணக்கு

ஹேக் செய்யப்பட்ட ஹ்ரித்திக் ரோஷன் முன்னாள் மனைவியின் இன்ஸ்டாகிராம் கணக்கு
Updated on
1 min read

நடிகர் ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூஸன் கானின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டு மீண்டும் மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பகிர்ந்துள்ள சூஸன் கான், "இன்ஸ்டாகிராமிலிருந்து வந்ததுபோல ஒரு போலி மின்னஞ்சல் வந்தது. அது போலியானது என்பதை நான் உணராமல் அதை க்ளிக் செய்துவிட்டேன். எனது கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது. தயவுசெய்து இப்படியான எந்த ஏமாற்று மின்னஞ்சல்கள், செய்திகள் வந்தாலும் நீங்கள் யாரும் க்ளிக் செய்து விடாதீர்கள்.

இந்தச் சூழலில் உடனடியாக உதவி, எனது கணக்கை மீட்ட இன்ஸ்டாகிராமில் இருக்கும் அற்புதமான குழுவுக்குப் பெரிய நன்றி. சைபர் திருடர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரது பதிவு பாலிவுட்டில் இருக்கும் இன்னும் சிலர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர்களும் அப்படி போலியான மின்னஞ்சல்களை க்ளிக் செய்ததாகப் பின்னூட்டமிட்டுள்ளனர்.

தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தானும் அப்படி ஏமாந்து போனதாகவும், நடிகை ஸ்மிரிதி கன்னா தனக்கும் அப்படி ஒரு செய்தி வந்ததாகவும், இதெல்லாம் பயமாக இருக்கிறது என்றும் பதிவிட்டுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு கரோனா ஊரடங்கு காலத்தில் தங்களின் மகன்களைப் பார்த்துக் கொள்ள, சூஸன் கானும், ஹ்ரித்திக்கும் தற்காலிகமாக ஒன்றாக வசித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in